×

பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி மிதக்க விட்ட கிராம மக்கள்: மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

லக்னோ: கங்கை நீர் உடலில் தொடர்ந்து பட்டால் விஷம் இறங்கிவிடும் என்ற மூடநம்பிக்கையில், பாம்பு கடித்த வாலிபரை ஆற்றில் மிதக்க விட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உ.பியின் புலன்சாகர் மாவட்டத்தில் உள்ள ஜெய்ராம்பூர் குடேனாவை சேர்ந்த மோகித்(20). அங்குள்ள ஒரு கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 26ம்தேதி புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது.

தேர்தலில் வாக்களிப்பதற்காக கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோகித் வந்துள்ளார். வாக்களித்த பின்னர் வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்கு அவர் சென்றுள்ளார். அப்போது விஷ பாம்பு ஒன்று மோகித்தை கடித்தது. வயல்வெளியிலேயே மயங்கி விழுந்த மோகித்ைத அவரது குடும்பத்தினர் டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அப்போது, கிராமத்தினர் சிலர், இங்கிலீஷ் மருத்துவத்தால் பாம்புக்கடி சரி ஆகாது, ஓடும் கங்கை நீரில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற கூறியுள்ளனர்.

இதை நம்பி, அவந்திகா தேவி கங்கா காட் பகுதியில் கயிறு கட்டி இரண்டு தினங்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியில் போட்டு வைத்துள்ளார்கள். இதனால், பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். 2 நாளுக்கு பிறகுதான் அவர் உயிரிழந்தது தெரிந்து உடலை மீட்டு தகனம் செய்தனர். மூடநம்பிக்கையால் ஒரு இளைஞரின் உயிர் அநியாயமாக பறிபோய் இருப்பது உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி மிதக்க விட்ட கிராம மக்கள்: மூடநம்பிக்கையால் பறிபோன உயிர் appeared first on Dinakaran.

Tags : Ganges River ,Lucknow ,Ganga ,U. Mokit ,Jairampur Gudena ,Bulansagar district ,Bi ,
× RELATED வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில்...